ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்போட்டியால் வந்த குழப்பம்
நேற்றைய தினம் (19) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் புள்ளிகள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மோதல் ஏற்பட்டு பின்னர் அது சுமுகமாகியுள்ளது.
எனினும், இன்றும் (20) இச்சம்பவம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் சுமார் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கம்புருபிட்டிய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.