பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது முனையத்தின் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு இன்று (08) உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம்
இதன்படி, அடுத்த குளிர்காலத்திற்குள் விமான நிலையத்தில் 30 புதிய வாயில்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, உள்நாட்டு விமானப் போக்குவரத்தை நிர்வகிக்க உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அமைச்சர் பிமல் உறுதியளிதுள்ளார்.
விமானப் போக்குவரத்து
மேலும், நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்காக அதனை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க நேற்றையதினம் (07) கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.