நாட்டில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் மின்வெட்டை தொடர்ந்து, இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த திடீர் மின்வெட்டின் பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் கருத்துக்களும் விமர்சனங்களும், அரசாங்கத்திடமிருந்து வந்த வேறுபட்ட கருத்துக்களை ஒட்டி முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நேற்றையதினம் ஏற்பட்ட மின்தடைக்கு, அரசாங்க தரப்பிலிருந்து வேறுபட்ட காரணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறான விமர்சனங்கள் எழுந்தன.
அதேவேளை, இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டமை, அநுர அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்து காட்டும் வகையில் உள்ளது எனவும் பல அரசியல் தரப்புகளிலிருந்தும் எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இது குறித்து மக்களின் நிலைப்பாடு என்னவென்று ஆராய்கின்றது லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சி,