முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு ஆசிரியர் சங்க போராட்டதில் பெரும் பதற்றநிலை: களத்தில் குவி்க்கப்பட்டுள்ள பொலிஸார்

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பதற்றநிலையானது தொடர்வதாகவும் களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது தாக்குதலையும் மீறி ஆசிரியர்கள் பின்வாங்காமல் போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறப்படுகிறது.

கொழும்பு ஆசிரியர் சங்க போராட்டதில் பெரும் பதற்றநிலை: களத்தில் குவி்க்கப்பட்டுள்ள பொலிஸார் | Court Orders Ban On Teachers Union Protest

இரண்டாம் இணைப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி இலங்கை ஆசிரியர் சங்கமானது போராட்டத்தை தொடர்ந்துவரும் நிலையில், பொாலிஸார் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவானது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றமானது தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் ஈடுபட உள்ள பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ளதோடு பாரிய போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உறுதியளித்தபடி தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தை முன்னெடுக்க கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பெருமளவிலான அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூடியுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர், சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்