கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பிணை
வழங்கப்பட்டுள்ளது.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், குற்றவியல் குழு தலைவருமான “கணேமுல்ல
சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னேவின் கொலையில்
தொடர்புடையதாக கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கே இவ்வாறு பிணை
வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய
காவல்பிரிவில் பணியாற்றும் கொன்ஸ்டபிளுக்கே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவல்துறை அதிகாரி
கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவைத் தொடர்ந்து சந்தேக நபர்
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க சந்தேக நபரை 50,000
ருபாய் ரொக்கப் பிணையிலும், தலா ரூபாய் 2.5 மில்லியன் இரண்டு சரீரப் பிணையிலும்
செல்ல உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தக் கூடாது என்றும் சந்தேக நபருக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரை தப்பிக்க வாகனம்
வழங்கியதாகவும் மற்றும் உதவியதாகவும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

