நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பாதுகாப்பு படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் பிரதமரிடம் கேள்வியேழுப்பியிருந்தார்.
இதன்போது, லசந்த விக்ரமதுங்க தொடர்பில் உரையாற்ற போவது குறித்து, சஜித் பிரேமதாச முன்னரே அறிவிக்கவில்லை என ரிஸ்வி சாலி சபையில் தெரிவித்திருந்தார்
சபை முதல்வர்
இதன்போது, “நான் பேசும் போது நடுவில் வர வேண்டாம்” என பிரதி சபாநாயகரை பார்த்து சஜித் எச்சரித்தார்.
இதையடுத்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சண்டியர்கள் நாடாளுமன்றத்திற்குள் வந்துள்ளதாகவும், பிரதி சபாநாயகரை அவமதித்தமைக்கு சஜித் மன்னிப்பு கோர வேண்டும் வேண்டும் என நாடாளுமன்றில் அழுத்தமாக கூறினார்.
மேலும், அர்ச்சுனா நேற்றையதினம் சபாநாயகரை ‘Shame’ என்ற வார்த்தையை உபயோகித்து அவமதித்ததாகவும், தயாசிறி ஜயசேகர ஆளும்கட்சி உறுப்பினர் மீது தவறான வார்த்தையை உபயோகித்ததாகவும் பிமல் ரத்நாயக்க இதன் போது சுட்டிக்காட்டினார்.
பிரதி சபாநாயகர் எச்சரிக்கை
இதனையடுத்து, சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், அர்ச்சுனா சபையில் வாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், நீங்கள் ஆசனத்தில் அமரவில்லை என்றால் படையினரின் உதவியுடன் உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவேன் என அர்ச்சுனாவை எச்சரித்தார்.
மேலும், நீங்கள் சபாநாயகரை அவமதித்துள்ளீர்கள், அப்போது சபாநாயகர் ஆசனத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன் என தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, தான் ‘நடுவில் வர வேண்டாம்’ எனக் கூறிய வார்த்தையை திரும்பப்பெறுவதாக குறிப்பிட்டதையடுத்து, சபை அமைதி நிலைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/s6TTISpWxCc