முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறை – வங்களாவடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான அரச பேருந்து

அம்பாறை (Ampara) – வங்களாவடி பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி
விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, நேற்று இரவு (28.06.2024) இடம்பெற்றுள்ளது. 

குறித்த அரச பேருந்து, பயணிகளுடன் அம்பாறை
நோக்கிச் செல்லும் போது நேர் எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோதும் நிலையில் வந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி 

இதன்போது, விபத்து ஏற்படுவதை
தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி சுதாகரித்து பேருந்தை நிறுத்த முற்பட்டவேளை, வீதியிலிருந்து விலகி அருகில் இருந்த நீர்வாய்க்காலுக்குள் சரிந்து பேருந்து
விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அம்பாறை - வங்களாவடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான அரச பேருந்து | Ctb Accident In Ampara Main Road Vangalavadi

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணம்
செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துனர் ஆகியோர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

பொலிஸார் நடவடிக்கை 

மேலும், விபத்து இடம்பெற்ற
அம்பாறை – வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அம்பாறை - வங்களாவடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான அரச பேருந்து | Ctb Accident In Ampara Main Road Vangalavadi

அத்துடன், சம்பவத்தின் போது குறித்த பேருந்தில் பயணம் செய்துள்ள 40இற்கும் அதிகமான பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மாற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த
இடத்திற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்