சிங்கள பேரினவாதத்தின் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (M. Trinavukarasu) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்து தமிழ் சமூகம் சிதைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய சூழலுக்கு தமிழ் அரசியல் தலைமைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நடைபெற்ற அனைத்து அரசியல் சிக்கல்களுக்கும் பாவ மன்னிப்பு கோரி அவர்கள் தம்மை திருத்திகொள்வார்களாக இருந்தால் தமிழ் அரசியல் மீள கட்டியெழுப்படும், அத்தோடு தமிழ் அரசியல் தலைமைகளை திருத்தும் பொறுப்பை தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் அரசியல் அறிஞர்களும் கையில் எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் அரசியல் களத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள், தமிழ் மக்கள் மீதான அநுரவின் (Anura Kumara Dissanayake) கரிசனை, வரவு செலவு திட்டத்தில் தமிழர்களுக்கான பங்கீடு, தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் பாதாள உலக கும்பின் பின்னணி என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/sNX4C4WYkM0?start=11