இலங்கையில் செயற்படும் தனியார் வங்கியான கார்கில்ஸ் வங்கி, சைபர் பாதுகாப்பு
சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கியின் முக்கிய செயற்பாடுகள் முழுமையாகப்
பாதுகாப்பாகவும் செயற்பாட்டுடனும் இருப்பதாக கார்கில்ஸ் வங்கி பிஎல்சி
தெரிவித்துள்ளது.
முக்கிய செயற்பாடுகள்
அனைத்து வங்கி சேவைகளும் தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும் என்றும்,
வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளலாம்
என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்த விடயம் தொடர்பில் நேற்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
செய்தியாளர் சந்திப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

