கொழும்பு 15இல் அமைந்துள்ள மிஹிஜய செவன அரச தொடர்மாடி குடியிருப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவரும் நிலையில், அவர்கள் தினசரி பயன்டுத்தும் மின்தூக்கி இயந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகின்றமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தினசரி மின்தூக்கி இயந்திரங்களை பயன்படுத்துகின்ற நிலையில் அவற்றின் இயக்கம் ஒழுங்குபடுத்தபட்ட முறையில் நடைபெறவில்லை என குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குடியிருப்பாளர்களின் வேண்டுகொள்
அத்துடன், இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் முறையான தீர்வை அவர்கள் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை என அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த மின்தூக்கி இயந்திரங்களின் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெகு விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.