முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை பொதுமக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

காற்று மற்றும் பலத்த மழையின் விளைவாக மரங்கள் வீழ்ந்து மண் மேடுகள் சரிந்து பல முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறு

நேற்று ஹட்டன் செனன் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பல பெரிய மரங்கள் வீழ்ந்து, போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தின.

சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Damages At Many Places Due To Severe Weather

ஹட்டன்-பொகவந்தலாவ வீதியிலும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.

வனராஜா பெருந்தோட்டத்தில் உள்ள வீடுகளின் மீது ஒரு பெரிய மா மரம் வீழ்ந்ததில் மூன்று வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹட்டன், நோர்வுட், கொட்டகலை மற்றும் நோர்டன் ஆகிய இடங்களில் உள்ள பிரதான மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன.

பண்டாரவளையில் உள்ள வேவதென்னவில் உள்ள ஒரு தேவாலயத்தின் மீது ஒரு மரம் விழுந்ததில் கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இன்றைய வானிலை 

இதற்கிடையில், இலங்கையின் இன்றைய வானிலை குறித்து வானிலை மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Damages At Many Places Due To Severe Weather

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமான அலைகள் எழும்பக்கூடும் என்று திணைக்களம் எதிர்வை வெளியிட்டுள்ளது.

எனவே, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு, மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகங்களுக்கு வானிலை ஆய்வுத் மையம் அறிவுறுத்தியுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்