ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வாகன ஏல விற்பனைக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏல விற்பனை
அத்தோடு, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஏல விற்பனையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மோசடியான முறையில் ஏலவி ற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு எதிராக விரைவில் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தான் முறைப்பாடொன்றை மேற்கொள்ளப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

