இலங்கையில் (Sri Lanka) மே தின கூட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுத்த அரசியல் தரப்பினர் சர்வதேச தொழிலாளர் தினத்தின் உண்மையான நோக்கங்களையும் விழுமியங்களையும் சிதைத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையாக மே தினக்கூட்டங்களை முன்னெடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டங்கள்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிலைப்படுத்தி கடந்த 1 ஆம் திகதி அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை முன்னெடுத்திருந்தன.
பகிரங்க விவாதத்தை தவிர்க்கும் சஜித்: குற்றம் சாட்டும் அனுர!
இந்த கூட்டங்கள் கட்சியை விளம்பரப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நாளாக தொழிலாளர் தினம் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் வர்க்கம்
நடுத்தர வருமானத்தை ஈட்டும் மக்களையும் அவதியுறும் தொழிலாளர் வர்க்கத்தையும் முதன்மைப்படுத்தி எந்தவொரு அரசியல் கட்சியும் தொழிலாளர் தினத்தை கொண்டாடவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் தேசமா… மனித புதைகுழியா!
இலங்கையில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மே தினக்கூட்டங்களின் போது தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தயாசிறி ஜயசேகர நினைவூட்டியுள்ளார்.
எனினும், தற்போது முன்னெடுக்கப்படும் மே தினக்கூட்டங்கள் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு நடத்தப்படுவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |