மட்டக்களப்பு(Batticaloa)- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில்
உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தாந்தாமலை பொலிஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியிலேயே குறித்த யானை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானைக்கு சுமார் 30 தொடக்கம் 35 வயது இருக்கும் எனவும் வயல் பகுதிக்குள்
சேதுமாக்கிய பின்னரே இந்த யானை இறந்திருக்கலாம் எனவும் அந்தப் பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர்.
இறப்புக்கான காரணம்
இந்தநிலையில், யானையின் உயிரிழப்பு தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கால்நடை வைத்தியர்கள் இறந்த யானையை பரிசோதனை செய்த
பின்னர், அதனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் வன
ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
யானை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் கால்நடை வைத்திய
பிரிவின் பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.