யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில்
கரையொதுங்கி வருகின்றன.
இந்தநிலையில், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (31.1.2025) காலை மூன்று
ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இறைச்சிக்காக சட்டவிரோத பயன்பாடு
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள்
உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால்
கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய
நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் – கஜிந்தன்