இறந்த நிலையில் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளதாக பலாலி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலாலி சந்திப் பகுதியில் உள்ள கடற்கரையிலேயே இந்த பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த
நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இறந்த நிலையில் ஆமை
குறித்த கடல் ஆமை மூன்று அடி நீளம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறந்ததுக்குரிய காரணம் தெரியவில்லை என்றாலும் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள்
மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக ஆமை பாறையில் மோதுண்டு
இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.