Courtesy: Sivaa Mayuri
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இதுவரை சுமார் 20வீதமான அறிக்கைகள் மாத்திரமே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் அறிக்கைகள்
இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது அறிக்கைகள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நாளை இரவுடன் முடிவடையும், காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேசிய தேர்தல் ஆணையகமும் வலியுறுத்தியுள்ளது.