முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியா – சீனாவை கையாளும் விதத்தில் வேறுபாடு இல்லை: அலிசப்ரி விளக்கம்

இந்தியா மற்றும் சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர்,

”இந்த மாத இறுதியில் நாங்கள் உத்தியோகபூர்வமாக கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்துவிடுவோம்.

வெளிநாட்டு கடன்

அதன் பின்னர் அதனடிப்படையில் நாங்கள் பணம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கை தனது பிணைமுறிகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் முன்னோக்கி செல்வதற்கு அதன் பிணைமுறி உரிமையாளர்கள் சிலருடன் தற்காலிக உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளது.

இந்தியா - சீனாவை கையாளும் விதத்தில் வேறுபாடு இல்லை: அலிசப்ரி விளக்கம் | Dealing With India China Sri Lanka

தற்போது ஏனைய தனியார் கடன்வழங்குநர்களும் சர்வதேச நாணயநிதியமும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இலங்கை 37பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது.

ஜூன் மாத இறுதியில் 10 மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை இந்தியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை எட்டியது.

22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையின் பொருளாதாரம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டை பெருமளவில் நம்பியுள்ள அதேவேளை இந்தியாவின் தென்பகுதிக்கு அருகே பிரதான கிழக்கு மேற்கு கடற்பாதையில் இலங்கை அமைந்துள்ளமை அதனை முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக மாற்றியுள்ளது.

கலாச்சார உறவு

இலங்கையுடன் வலுவான கலாச்சார உறவுகளை கொண்டுள்ள இலங்கையும் சீனாவும் பலவருடங்களாக கொழும்பின் செல்வாக்கை பெறுவதற்காக போட்டிபோட்டுள்ளன.

இதன் காரணமாக அந்த நாடுகளின்; மோதல்களின் நடுவில் இலங்கை சிக்குண்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை, துறைமுக அபிவிருத்தி மீள்சக்திதுறை அபிவிருத்தி போன்றவற்றிற்கு இந்தியா மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இந்தியா - சீனாவை கையாளும் விதத்தில் வேறுபாடு இல்லை: அலிசப்ரி விளக்கம் | Dealing With India China Sri Lanka

இருநாடுகளும் தங்கள் மின் கட்டமைப்க்களை கட்டங்களாக இணைக்க திட்டமிட்டுள்ளது.

சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நிற்பது குறித்து கடந்த சில வருடங்களில் கரிசனை வெளியிட்டுள்ள புதுடில்லி தனது கடற்பகுதிக்கு அருகில் சீன கப்பல்கள் தரித்து நிற்பதன் நோக்கம் மற்றும் அதன் திறமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.