Courtesy: Sivaa Mayuri
இலங்கை அதிகாரிகள், உத்தியோகபூர்வ கடனளிக்கும் நாடுகளின் அமைப்பான OCC வழங்கும் விதிமுறைகளைப் போன்று, தனியார் கடனளிப்பவர்களுடன் உடன்பாடுகளை எட்டவேண்டும் என்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ கடனளிப்பவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
குறைந்தபட்சம் தனியார் கடனளிப்பவர்களுடன் சாதகமான விதிமுறைகள் குறித்த உடன்படிக்கையை விரைவில் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அதிகாரிகள் செயற்படுவார்கள் தாம் எதிர்ப்பார்ப்பதாக அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வரவேற்பு
இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் மறுசீரமைப்பு, சர்வதேச நாணய நிதிய திட்ட அளவுருக்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யவேண்டும் என்றும் இலங்கைக்கான உத்தியோகபூர்வ கடனளிப்பவர்கள் குழு(OCC) தமது அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து தலைமை தாங்கும் OCC உடன், பிரான்சின் பாரிஸில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் நாடு ஒரு நிலையான பாதைக்கு திரும்புவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக OCC வரவேற்பை வெளியிட்டுள்ளது.
அதேநேரம் கடன் மறுசீரமைப்பு விடயங்களை உறுதிப்படுத்த தமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இலங்கையில் இருந்து பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து தலைமை தாங்கும் OCC அமைப்பு அறிவித்துள்ளது.