விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்யும் முடிவை மாற்றுமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்க நாடாளுமன்ற ஊழியர்கள் தயாராகி வருகின்றதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி அடுத்தவாரம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளமையினால் அப்போது இந்த கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொடுப்பனவு ரத்து
அத்துடன் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அரச சேவையில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடுமுறை கொடுப்பனவு நீண்ட காலமாக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், விடுப்பு கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டதால், நாடாளுமன்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.