முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு (Batticaloa) வாவியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கடற்றொழிலால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு புதிய அரசாங்கம்
நடவடிக்கையெடுக்க வேண்டும் என கடற்றொழிலால் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின்
பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள
பிரதிப்பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் இ.சிறிநாத் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட
கடற்றொழில் நீரியல்வள திணைக்கள ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போது மட்டக்களப்பு வாவியில் நடைபெறும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பில் கடற்றொழிலார்கள் சங்கத்தினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 

தொடர் பிரச்சினை 

தடைசெய்யப்பட்ட வலைகள் மட்டக்களப்பு வாவிக்குள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக
மீன்கள் அழியும் நிலையேற்படுவதுடன் வாவியின் ஓரங்களில் காணப்படும்
கன்னாதாவரங்களும் அழிக்கப்படுவதனால் மீன் இனங்கள் உற்பத்திகள்
தடுக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Demand Made By Batticaloa Fisheries Associations

அத்துடன், மட்டக்களப்பு வாவி ஓரங்களை சிலர் நிரப்பி ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை
அமைப்பதன் காரணமாகவும் சில இடங்களில் வீதிகளை அமைப்பதற்கு வாவிகளை நிரப்புவதன்
காரணமாகவும் மீன்கள் அழிவடையும் நிலைமை காணப்படுவதாகவும் கடற்றொழிலாளர் சங்கத்தினால்
தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பாவிக்கப்படுவதனால் மற்றும் சிறிய மீன்கள்
பிடிக்கப்படுவதனால் மீன்கள் பெருக்கம் குறைவதாகவும் கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இவை காரணமாக வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எதிர்கால சமூகத்திற்கு சத்துள்ள மீன்களை
வழங்குவதும் தடுக்கப்படுவதாகவும் இவற்றினை தடுத்து மீன் இணங்களை பாதுகாத்து
எதிர்கால சமூகத்தற்கு வழங்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Demand Made By Batticaloa Fisheries Associations

தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையிலான அனைத்து செயற்பாடுகளும்
முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு
தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் என இங்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள
திணைக்கள பிரதிப்பணிப்பாளர் குரூஸ் கடற்றொழிலாளர் அமைப்புகளிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து
கடற்றொழில் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளதாகவும்
விரைவில் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக மட்டக்களப்பு
மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்கும்
எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இக்கூட்த்தில், மட்டக்களப்பு வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.  

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.