முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு – கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச
வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில், நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு உள்வாரி
பட்டதாரிகள் சங்கத் தலைவர்
ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்துள்ளார்.

யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (22) காலை ஏற்பாடு செய்து
கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பட்டமளிப்பு பெற்ற பட்டதாரிகள்

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்வாரி பட்டதாரிகள் 2500 மேற்பட்டவர்கள்
காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நியமனம் அரசினால்
வழங்கப்பட்டது. அரசினால் நியமனம் வழங்கப்பட்டபொழுதிலும் 2014 ஆம் ஆண்டு
உயர்தர மாணவர்ளுக்கு அதாவது 2020/2021 பட்டமளிப்பு பெற்ற பட்டதாரிகளுக்கு
பட்டம் வழங்கவில்லை.

வடக்கு - கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Demand North East Internal Graduates Association

யாழ் பல்கலைக்கழகம், மாணவர்களை வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க
வேண்டிய தேவை குறித்து தெளிவுபடுத்தி கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தது.

கோவிட், குண்டுவெடிப்பு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க போராட்டம் என்பன
எமக்கு பட்டத்தினை பெறுவதில் தாமதம் ஏற்பட காரணமாக அமைந்தன. இருந்த பொழுதிலும்
எமது அணியினை சேர்ந்த வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
கிடைக்கப்பெற்றுள்ளது.

35000 பட்டதாரிகள் உள்ளீர்ப்பு

இந்நிலையில் கடந்த அரசாங்கத்துடன் பல்கலைக்கழகம் எமக்கு தந்த
நியாயபூர்வமான கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடலை மேற்கொண்ட பொழுதிலும்
அரசாங்கம் மாறிவிட்டது.

வடக்கு - கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை | Demand North East Internal Graduates Association

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடந்த ஒக்ரோபர்
மாதம் முதலாம் திகதி விரைவு தபாலை அனுப்பினோம் , நவம்பர் மாதம் 4 ஆம் திகதி
பிரதமர் ஹரிணிக்கு விரைவு தபால் அனுப்பிய பொழுதும் எமக்கு எந்த பதிலும்
வழங்கப்படவில்லை.

அரசுக்கு சார்பானவர்கள் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைய பேசலாம், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய பேசலாம் என தெரிவித்தனர் இரு தேர்தல் முடிந்தும்
எந்த பலனும் இல்லை.

அரசாங்கம் 35000 பட்டதாரிகளை உள்ளீர்ப்பதாக கூறிய பொழுதிலும் இதுவரை நடவடிக்கைகளை
முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.