புதிய வாகனப் பதிவுக்கான இலக்கத் தகடுகளின் பற்றாக்குறைக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தற்காலிக தீர்வொன்றை வழங்கியுள்ளது.
தட்டுப்பாடு காரணமாக, இலக்கத்தகடுகள் வழங்கும் செயற்பாடு தாமதத்தை எதிர்நோக்குவதாக
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதற்கான தற்காலிக தீர்வொன்றையும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முன்வைத்துள்ளது.
தற்காலிக அனுமதி
அதன் பிரகாரம் புதிய வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அனுமதிக் கடிதமொன்றை வழங்கத் தீர்மானித்துள்ளது.

இடைக்காலத் தீர்வாக, வாகன எண் அடங்கிய கடிதத்துடன், பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தற்காலிக நடவடிக்கை ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

