வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்றையதினம் (11) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, களுதாவளையில்
அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள
குறை நிறைகளை வர்த்தகர்களிடமும், அப்பகுதி விவசாயிகளிடமும் கேட்டறிந்து
கொண்டார்.
கிராமிய பொருளாதார அமைச்சினால் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குறித்த
பொருதளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆண்டு இறுதிப்பகுதியில்
முடிவுறுத்தப்பட்டு இன்று வரையில் அது மக்கள் பாவனைக்கு விடப்படாமல் இருந்து
வந்தது.
வர்த்தக நடவடிக்கை
கிழக்கு மாகாணத்திற்கென அமையப் பெற்றுள்ள இந்த விசேட பொருளாதார மத்திய
நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விஸ்த்தரித்து அப்பகுதி
விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கு வசதி வாய்ப்பினைப் பெற்றுக்
கொடுப்பதற்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதியமைச்சர்
அங்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் அவதானித்திருந்தார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா
முரளிதரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட
பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.