தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த மாணவி விஷம் அருந்தியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த தம்புள்ளை மேல்அரவுல பகுதியைச் சேர்ந்த உயிரியல் துறை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த மாணவி இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் தூங்கியதாகவும், தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால் பெற்றோர் அவரைப் பரிசோதித்த போது மயக்கமடைந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, இந்த மாணவியை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ள போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

