நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின்(dilan perera) காரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (13ம் திகதி) நாடாளுமன்ற உறுப்பினர் மத்துகமவில் கூட்டமொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இச்சம்பவத்தை எதிர்கொண்ட போது டிலான் பெரேராவுடன் பயணித்த ஒருவர் விபத்தில் காயமடைந்துள்ளார்.
கனமழையால் ஏற்பட்ட விபத்து
கனமழை காரணமாக கார் சறுக்கி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் விபத்து
முன்னதாக இன்றையதினம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) பயணித்த கார் புத்தளத்தில் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.