ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாளைய(08) தினத்தை விசேட தினமாக அறிவித்துள்ளதாக சிரேஷ்ட உப தபால் மா அதிபர் ராஜித.கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைய தினம் அமையப்பெறுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர் அட்டை விநியோகம்
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும். இதனால் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத பொதுமக்கள், நாளைய தினம் வீட்டில் இருந்து தமது கையொப்பத்துடன் அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உப தபால் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் 10ம் 11ம், 12ம், 13ம் மற்றும் 14ம் திகதிகளிலும் வீடு தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள்
14ம் திகதிக்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் 18ம், 19ம், 20ம் மற்றும் 21ம் திகதிகளில் தமது பிரதேசத்திற்கு கடிதங்களை விநியோகிக்கும் தபால் நிலையத்திற்கு சென்று அங்குள்ள தபால் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து தமக்குரிய வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக சிரேஷ்ட உப தபால் மா அதிபர் ராஜித.கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.