முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழினப் போரில் தவிர்க்கமுடியாத ஆளுமை தியாக தீபம் திலீபன்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக
தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர்
பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல்
ஆரம்பித்ததுடன், மாவீரர் றொஷானின் தாயார்
இரத்தினசிங்கம் பொற்கொடியால்
பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர்
மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக
கலந்துகொண்டனர்.

ஐந்து அம்ச கோரிக்கை

1. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக்
குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. சிறைகளிலும், முகாம்களிலும்
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

தமிழினப் போரில் தவிர்க்கமுடியாத ஆளுமை தியாக தீபம் திலீபன் | Dileepan 37Th Death Anniversary

4. ஊர்காவல் படையினருக்கு
வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில்
புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,
தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை
வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி
சாவைத் தழுவிக் கொண்டார்.

திலீபன், ஈழவிடுதலையில் மாபெரும் அகிம்சை போராட்டம் நடத்தி உயிர் நீர்த்தவர்.

29 நவம்பர் 1964-ல் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள ஊரெழு எனும் இடத்தில் பிறந்த இவர் தமிழீழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துகொண்டார்.

தியாக தீபம் தீலிபன் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தண்ணீரும்கூட அருந்த மாட்டேன் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

முதல் நாள் போராட்டம் தொடங்கிய அன்று திலீபன் மேடை ஏறி உண்ணாவிரத போராட்டத்தைப் பற்றிய விளக்க உரை கொடுத்துவிட்டு, அவர் வாசிப்பதற்காக சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தன்னிடம் வைத்திருந்தார்.

மேலும் அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.

இந்திய சமாதானப்படை

இரண்டாம் நாள் அதிகாலை திலீபன் எழுந்து சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு மேடை ஏறினார். உடல் சக்தி விரயமாகும் என்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்தினார். அன்றும் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.

மூன்றாம் நாள் திலீபன் விழிக்கும் போதே தண்ணீர் வற்றி உதடுகள் வெடிப்படைந்திருந்தன. மேலும் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.மருத்துவ சோதனைக்கு மறுத்துவிட்டார்.

தமிழினப் போரில் தவிர்க்கமுடியாத ஆளுமை தியாக தீபம் திலீபன் | Dileepan 37Th Death Anniversary

நான்காம் நாள் திலீபனால் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல்போனது.

ஐந்தாம் நாள் அவரால் எழவே முடியவில்லை. சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கியது. இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ கர்னல் அவரை சந்தித்து பேசிவிட்டு, மேலிடத்தில் பேசுவதாக கூறியுள்ளார்.

ஆறாம் நாள் திலீபனால் பேசமுடியாமல்போனது. ஏழாம் நாள் இந்திய பத்திரிகைகள் இலங்கைக்கு வந்தபோது திலீபன் “எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்” என்றார்.

எட்டாவது நாள் அவருடன் சேர்ந்து பொது மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள்.

ஒன்பதாவது நாள் திலீபனால் கண் திறக்கமுடியவில்லை. அன்று இந்தியத் தூதுவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இடையே இரண்டுகட்டமாக பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது.

பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 52 எனவும், இரத்த அழுத்தம் 80/50 எனவும் இருந்தது. அவர் அன்று “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்” என்றார்.

பதினோராவது நாள் உடல் அசைவற்று இருந்தார் திலீபன். அவருக்கு மிகவும் பிடித்த பாடலான “ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத்தா. உன் சீருடைகளை எனக்குத்தா” என்ற பாடலை அங்கிருந்தோர் பாடினார்கள்.

பனிரெண்டாவது நாள்

அவர் வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், பனிரெண்டாவது நாள் காலை 10.48 மணிக்கு அவர் ஒரு சொட்டு தண்ணீர், ஒரு பருக்கை உணவு என எதையும் உட்கொள்ளாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்துகொண்டு வீர மரணம் அடைந்தார்.

தியாக தீபம் திலீபன் இறந்தபோது அவரின் வயது 23 மட்டுமே.

தமிழினப் போரில் தவிர்க்கமுடியாத ஆளுமை தியாக தீபம் திலீபன் | Dileepan 37Th Death Anniversary

இவரின் மறைவின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் லெப்டினன் கர்னல் திலிபன் எனும் பதவி உருவாக்கப்பட்டது.

அதன்பின்னரே நல்லூரில்  இவருக்கு நினைவுத்தூண் எழுப்பப்பட்டது.

ஆனால், 1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பானத்தை கைப்பற்றியதும், அவரின் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது.

அதன்பின்னர் மீண்டும் அவருக்கு நினைவுத்தூபி எழுப்பப்பட்டது.

ஆனால் அதன் பிறகு 2007 மற்றும் 2012அம் ஆண்டுகளிலும் அவரின் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.