பதுளை மருத்துவமனையின் பிரபல மருத்துவர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பதுளை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலித ராஜபக்ச, தனது அர்ப்பணிப்பான சேவை காரணமாக சமூக மட்டத்திலும் சமூக வலைத்தளங்கள் ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற எல்ல பேருந்து விபத்தின் போது காயமடைந்தவர்களை காப்பாற்றுவதிலும் அவரது செயற்பாடு பாராட்டுக்கு உள்ளாகியிருந்தது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இந்நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் விசாரணையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராகவே குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பில் அரச சேவை ஆணைக்குழு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

