Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை ஆளுநர் நேற்று(20.11.2024) குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
இங்கு திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்கள் மூலம் தொழில் ஈடுபடுவதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
அதனபடி தற்போதைய அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு எவரது செல்வாக்கிற்கும் அஞ்சாமல் தமது கடமைகளை மேற்கொள்ளுமாறும், அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால் மீனவ மக்களின் நலனுக்காக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.