Courtesy: H A Roshan
திருகோணமலை மானாண்டான் குளம் வயற் காணிகள் விடுவித்தல்
தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (18)திருகோணமலையில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
அனுமதிப் பத்திரம்
திருகோணமலை முத்துநகர் மானாண்டான் குளப் பகுதியில் சுமார் 1970ஆம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வந்த 75 குடும்பங்களைச் சேர்ந்த பலருக்குக் காணி அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
சில பேருக்குப் பதிவு செய்து பின்னர் வழங்குவதாகவும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரால் விபரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அக்காணியினை தற்பொழுது வன பாதுகாப்பு தினைக்களம் தங்களுடைய காணியாக கூறி வருவதாகவும், அக் காணியினை மீண்டும் பெற்று விவசாயத்தினை மேற்கொள்வதற்கும் அனுமதி பெற்றுத்தருமாறும் மானாண்டான் குளக் கிராமத்தில் வாழ்ந்த பொது மக்களின் கோரிக்கை அடங்கிய கலந்துரையாடல் மானாண்டான் குளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சேகர் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மானாண்டான் குளம் பகுதில் வாழ்ந்த பொதுமக்களின் பூர்வீக காணிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்குரிய முன்னெடுப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான முதற்கட்ட முன்னெடுப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.