ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தலாம் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு நேற்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்திற்கான திகதி
4 ஆம் திகதி விவாதத்தை நடத்துவதற்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் நாட்டிற்கு வருகை தருவதால், அன்று தனக்கு விவாதத்தை நடத்த முடியாது எனவும் தொடர்புடைய விவாதத்திற்கு வேறு திகதியை நிர்ணயிக்கலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற விவகாரக் குழுவில் விவாதித்து, அதற்கான திகதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

