பொல்கஹவலை அருகே தொடருந்து ஒன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக புகையிரத சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று(1) அதிகாலை பொல்கஹவலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்றில் வல்பொல அருகே இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சேவைகளில் தடங்கல்
அதன் காரணமாக அநுராதபுரம்-யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி-மாத்தளை, பதுளை போன்ற இடங்களுக்கான தொடருந்து சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இயந்திரக் கோளாறை சரி செய்யும் அவசர செயற்பாடுகளை தொடருந்து திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

