மலைநாட்டில் 5,000 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும்
அகற்றும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத் துறையையும் பாதிக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் பீடத்தின் முன்னாள் மூத்த
பேராசிரியர் அதுல சேனாரத்ன, இதனை தெரிவித்துள்ளார்.
பேராசிரியரின் பரிந்துரை
நுவரெலியா நகரம் கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்தில் உள்ளது என்றும்,
அங்குள்ள தேயிலைத் தொழில் மற்றும் பிற வர்த்தகங்களை அகற்றுவது, நாட்டுக்கு
கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நிலச்சரிவு அபாயத்தைத் தவிர்ப்பதற்கான மாற்று வழிமுறையாக மத்திய மலைநாட்டில்
கைவிடப்பட்ட நிலங்களை காடு வளர்ப்பு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

குறித்த கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை ஒரு முன்னோடித் திட்டமாக காடு
வளர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் சேனாரத்ன
பரிந்துரைத்துள்ளார்.
பாறைகள் உள்ள பகுதிகளில் காடு வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்
மண் அடுக்குகளின் நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு சாத்தியக்கூறு ஆய்வு
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

