பெரும் பண மோசடியில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள பெண்ணை கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தேடப்படும் பெண் 40 வயதான ரக்வானை, பொதுப்பிட்டியா வீதி, கந்தகம பகுதியைச் சேர்ந்த தலுகொட ஆராச்சிலாகே ஹர்ஷனி பிரியந்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான பணமோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக இந்த பெண்மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பெண்கள் ரக்வானை காவல் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
குறித்த பெண் சந்தேகநபர் தனது வீட்டு முகவரியை விட்டு வெளியேறி தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஏதேனும் தகவல் அறிந்தால்
சந்தேக நபரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.

தொலைபேசி எண்கள் –
ரக்வானை காவல் நிலையம் – 071 – 8591394
ரக்வானை காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவு – 071 – 8593808

