போலி இலக்கத்தகடுகளுடன் சொகுசு காரை ஓட்டி வந்த பெண் மருத்துவர் ஒருவர் காருடன் கைது செய்யப்பட்டதாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர், கண்டி வாரியபொல சிறி சுமங்கல மாவத்தை பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் மருத்துவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர்
கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர், கார் தனது கணவருடையது என்று கூறியுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தார்.
கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

