இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும்
ஆவணப்படம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்(anura kumara dissanayake) ஒப்படைக்கப்படுவதற்காக
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம்(ramalingam chandrasekar) கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில்
தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று(17) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில்
உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில்
அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
அத்துமீறிய இழுவைமடி மீன்பிடி
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள்
பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.




