கடந்த 30ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.05.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.05.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 302.35 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 221.72 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 380.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 365.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு
பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |