Courtesy: Chandana
இரண்டு வருடங்களின் பின்னர் கடந்த மார்ச் மாதம் ஏற்றுமதி மூலம் அதிகூடிய வருமானம் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(CBSL)) தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த சாதனை வருமானம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 1,037 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை
அமெரிக்க டொலர் வருமானம்
இதன்படி இந்த வருடம் 1,039 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறித்த வருமானம் அதிகரித்துள்ளது.
தொழில்துறை, விவசாயம் மற்றும் கனிம ஏற்றுமதி மார்ச் 2024 இல் அதிகரித்துள்ளதுள்ளதாகவும், அவற்றில், தேயிலை மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி தனித்து காணப்பட்டதாகவும் மத்தியவங்கி அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 2023 இல் 1,450 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதியின் விலை கடந்த மார்ச் மாதத்தில் 1,508 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும், 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் கடந்த மார்ச் மாதத்தில் சிறிய வளர்ச்சியைக் காட்டியுள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அளம்பில் துயிலுமில்ல காணியை இராணுவம் சுவீகரிக்க முயற்சி: தடுத்து நிறுத்திய மக்கள்
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |