முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை தொடர்பில் அநுரவிடம் டக்ளஸ் கேள்வி

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கேள்வியெழுப்பவுள்ளதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில்  (Jaffna) அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கையின் ஜனாதிபதி அநுரவின் சந்திப்பின்போது
கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்
என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில்
ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் .

ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இலங்கை (Sri Lanka) – இந்தியா (India) இடையே
கடற்றொழிலாளர்கள் விடயம் தவிர இணக்கம் காணப்பட்ட அல்லது கைச்சாத்திடப்பட்ட
ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தலைமையிலான
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை வலுவூட்டியதாகவே அமைந்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன், இதேவேளை கடற்றொழிராலர் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளையும் குறித்த
விஜயத்தின் போது எட்டப்பட்டதாக தெரியவில்லை.

இதேநேரம் மனிதாபிமான அடிப்படையில்
குறித்த விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/-x4Rrm0QshQ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.