முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கை(sri lanka) வழங்கிய சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஏற்பட்டுள்ள பல தொழிநுட்ப பிழைகள் காரணமாக அந்த சாரதி அனுமதி பத்திரத்தை இத்தாலிய(italy) அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)தெரிவித்தார்.

எனவே இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று(15) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள்

இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையின் பலனாக இது அமைந்துள்ளது.

இதன்படி, இந்த பிரச்சினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலிய அரசாங்கம் அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த நாட்டிலிருந்து சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம், அது தொடர்பான தொழில்நுட்ப பிழைகளை சமாளித்து இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியும் எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Driving License For Sri Lankans Residing In Italy

இத்தாலியில் நடைமுறைக்கு வராத இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம்

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் 2022 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அது தற்போதைய அரசாங்கத்தின் தவறல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Driving License For Sri Lankans Residing In Italy

முன்னாள் தூதுவர்களினால் ஏற்பட்ட பிரச்சினையினால் 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்