முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா, கடந்த 10ம் திகதி விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் அன்றையே இரவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அதிகாலை இரண்டு மணியளவில் தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு
அதன் பின் 12ம் திகதி அவர் மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று நண்பகல் அளவில் துமிந்த சில்வாவை மீளவும் சாதாரண சிறையொன்றுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.