முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி: வெளிவந்துள்ள அதிர்ச்சிப் புகைப்படங்கள்

இலங்கைக்கான(Srilanka) ஈ-விசா நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொழும்பு விமானநிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இலங்கை திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு(Colombo) வந்திறங்கும் பயணிகள் பலமணிநேரம் வரிசையில் நிற்கவைக்கப்படுவதாகவும், வரிசைகளில் நிற்கவைக்கப்படுகின்ற பயணிகளை வழிகாட்டுவதற்கு எந்த ஒரு அதிகாரியும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், பயணிகள் வரிசைகளில் நிற்பதற்கான பிரிப்புகள் எதுவும் அங்கு இல்லாமல் மந்தைகள் போன்று கூட்டமாக அவரகள் நிறுத்திவைக்கப்பட்டுவருவதாகவும், பயணிகள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

அதனைவிட, வரிசையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காத்துக்கொண்டிருக்க, பின்கதவால் பலருக்கு வீசாக்கள் வழங்கப்படுவதாகவும், பல வெளிநாட்டவர்கள் அதிருப்தி வெளியிடுகின்றார்கள்.

இலங்கையின் பொருளாதார சீர்கேடுகளை ஓரளவுக்குத் தாங்கி, அன்னிய செலவானியை இலங்கைக்கு கொண்டு வருகின்ற சுற்றுலாத்துறையை இந்த அளவுக்குப் பலவீனப்படுத்துகின்ற செயல் கொழும்பு விமானநிலையத்தில் இடம்பெறுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு உடனடியான அதனை நிவர்த்திசெய்யவேண்டும் என்றும் அந்தக் காட்சிகளை நேரில் கண்ட சில இலங்கையர்கள் தெரிவித்தார்கள். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்