வங்கக்கடலில் (Bay of Bengal) இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 6.10 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து (Kolkata) 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புக்கள் குறித்த அறிவிப்பு
இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி 7ஆம் தேதி நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.