இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது.
அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெற்றது.

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு எச்சரிக்கை
08 இடங்களில் தாக்குதல்கள்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமான அன்று சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
பாதுகாப்பு நடவடிக்கை
நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஆராதனையில் பயங்கரவாத தாக்குதலில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளிடம் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |

