முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ. நா சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு

Courtesy: kiyas

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கை – மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான (UNFPA) பிரதிநிதி
குன்லே அதேனிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

குறித்த சந்திப்பானது நேற்று (10) நடைபெற்றுள்ளது.

ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவு

கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை
மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு
பங்குதாரர்களுடன் UNFPA இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக
இருப்பதாக அதேனி உறுதியளித்துள்ளார்.

கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ. நா சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு | Eastern Governor And Un Representative Meeting

பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை
மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதை அவர்
முன்னிலைப்படுத்தியதோடு, இந்த முயற்சிகளில் ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவினை
எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தின் பல் கலாசாரத் தன்மையை
அங்கீகரித்து, அதன் பன்முகத்தன்மையை பலமாகப் பார்க்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

ஆளுநரின் பதவிக்காலம்

மேலும், மாகாணத்தில் சமூக மற்றும் இன நல்லிணக்கத்தையும், பாலின
சமத்துவத்தையும் மேம்படுத்துவதே தனது முதன்மையான கவனம் என்று கூறிய
ஆளுநர், குடும்ப வன்முறைகள் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, பெண்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ. நா சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு | Eastern Governor And Un Representative Meeting

அதெனி, ஆளுநரை சந்தித்ததையிட்டு, நன்றி தெரிவித்ததோடு, ஆளுநரின்
பதவிக்காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஆளுநரின் தலைமையில் கிழக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும்
என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்