உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் ஒரு உணவு பொருளாக தயிர் காணப்படுகின்றது.
அதிக அளவில் ஆரோக்கியங்களை கொண்டுள்ள தயிரை பலரும் விரும்பி உட்கொள்கின்றனர்.
இருப்பினும் தயிர் உட்கொள்ளும் அனைவரின் மத்தியிலும் பொதுவான ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
ஊட்டச்சத்து நிபுணர்கள்
அந்தவகையில், தயிரை இரவு நேரத்தில் உட்கொள்ளலாமா கூடாதா என்பதே அந்த சந்தேகமாகும். எனவே இந்த சந்தேகம் தொடர்பில் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியவற்றை பார்க்கலாம்.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் தயிரை பலரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பானமாகவும் உணவிலும் சேர்த்து உட்கொள்கின்றனர்.

தயிரில் உள்ள நல்ல பக்டீரியாக்கள் எளிதாக உணவு சமிபாடு அடைய உதவும் என்பதுடன் தயிரில் உடலுக்கு தேவையாக ஊட்டச்சத்துக்கள் அதிக காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவில் தயிரை உட்கொள்வது
இவ்வாறு பல நன்மைகளை தரும் தயிரை இரவு நேரத்தில் உட்கொள்வது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுயுள்ளனர்.
அதேநேரம், காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் சளி பிரச்சினைகள் இருந்தால் இரவு நேரத்தில் தயிரை உட்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லாதவர்கள் தயிரை தாராளமாக இரவில் உட்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இரவு நேரத்தில் தயிரை உட்கொள்பவர்கள் சர்க்கரை சேர்த்து அல்லது மிளகு கலந்து உட்கொள்வதும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

