முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை : சஜித் பகிரங்கம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு ஒன்றில் நேற்று (24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவர்களினது அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது.

புதிய சீர்திருத்தங்கள்

பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் சரியான திட்டமொன்று இல்லாமையால் பிள்ளைகளே பாதிப்பட்டுள்ளனர்.

புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை : சஜித் பகிரங்கம் | Education Reform Unlikely To Be Implemented

அரசாங்கம் விரும்புவது போல் ஜனவரி முதல் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், இது குறித்து சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தருணத்தில் மக்கள் எந்தளவு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் பேரழிவால் 374,000 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன.

48 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு 

23 சதவீத விவசாய காணிகளும் 35 சதவீத தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாதத்திற்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை : சஜித் பகிரங்கம் | Education Reform Unlikely To Be Implemented

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலை காணிகள் கூட அழிந்துபோயுள்ளன.

அரசாங்கம் வீராப்பு பேசிக் கொண்டிருக்காமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் வழிமுறைமைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்