முட்டையை ரூபாய் 45க்கு குறைவான விலையில் வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
முட்டையின் விலை
தற்போது சந்தையில் ஒரு முட்டையின் விலை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலரால் இந்தத் தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முட்டையை ரூபாய் 45க்கு குறைவான விலையில் வழங்க முடியும் என்று சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

