மதவாச்சி அருகே மின்சாரம் தாக்கியதன் காரணமாக எட்டு வயதுக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலி கனதராவ பிரதேசத்தில் நேற்று(27) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார ஹீட்டர் ஒன்றைப் பயன்படுத்தி நீரை கொதிக்க வைக்க முயன்றபோதே குழந்தை மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனையடுத்து, காயமடைந்த குழந்தை மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.